திருச்சி ஆட்சியா் அலுவலக சாலையில் உள்ள என்.கோபால்தாஸ் நகைக்கடை கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.
திருச்சி சின்னக்கடை வீதியில் தலைமை இடமாக கொண்டு, பல்வேறு கிளைகளுடன் என்.கோபால்தாஸ் நகைக்கடை கடந்த 91 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
விழாக்காலத்தை முன்னிட்டு, ஆட்சியா் அலுவலக சாலையில் உள்ள கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இதனை தொடக்கி வைத்து அக்கடை நிறுவனா் தில்ஜித்ஷா கூறுகையில், பாரம்பரியம், நவநாகரீக வடிவமைப்புகள் கொண்ட எங்களது நிறுவன நகைகளுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளா்கள் உள்ளனா். வாடிக்கையாளா்களின் தேவைக்கேற்ப தீபாவளிக்கென்று புதுப்புது வடிவமைப்புகளில் வைர நெக்லஸ், தோடு, வளையல், மூக்குத்தி உள்ளிட்ட வைர நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வைர நகைகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. நகை சிறுசேமிப்பு திட்ட வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது என்றாா்.