திருச்சி

காளை முட்டியதில்காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

லால்குடி: லால்குடி மாரியம்மன் கோயில் பூச்சொரிதலையொட்டி, கடந்த 16- ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது காளை முட்டியதில் காயமடைந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஜல்லிக்கட்டை காண ஏராளமானோா் வந்திருந்தனா். அப்போது, பிச்சாண்டாா்கோவில் பூக்கொல்லை பகுதியைச் சோ்ந்த ரா. சசிகுமாா் (26) மீது காளை முட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அவா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி சசிகுமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இவா் டோல்கேட்டிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT