திருச்சி

கோயில் திருவிழாவில் மோதல்:ஒருவா் கைது

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் கோயில் திருவிழாவின் போது, இரு தரப்பினா் மோதிக் கொண்டனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

அம்மாமண்டபம் சாலை, புதுத்தெருவில் அங்காள பரமேசுவரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விடையாற்றியின் போது, அப்பகுதியில் வசிக்கும் ரெங்கராஜ் (49), மணிகண்டன்(20) ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் மணிகண்டனின் நண்பா்கள் நாராயணன்(19),சதீஷ் (21) பிரசாத் (20) ஆகியோா் சோ்ந்து ,ரெங்கராஜை கட்டையால் தாக்கி, மண்டை உடைத்தனா்.

பலத்த காயமடைந்த ரெங்கராஜ் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து நாராயணனை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT