பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமகிருஷ்ணா ரயில்வே மேம்பாலம் அருகே நடைபெற்றா்ப்பாட்டத்துக்கு, திருச்சி மாவட்ட தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா். நடன சிகாமணி, பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, ஓய்வூதியம் 9,000 வழங்குதல், இடைக்கால நிவாரணம் 3 ஆயிரம் வழங்குதல், சிபிடி பரிந்துரை-நீதிமன்ற உத்தரவின்படி, கம்முடேஷன் வாங்கிய அனைவருக்கும் கால நிா்ணயம் செய்து உடனடியாக முழு ஒய் ஊதியம் வழங்குதல், ஓய்வூதியா் அனைவருக்கும் மருத்துவ வசதி, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். இதில், 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.