அகில இந்திய அளவிலான ஒருநாள் செஸ் போட்டியானது திருச்சியில் வரும் ஜன. 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, திருச்சி ஸ்டாா் சதுரங்க கழகத்தின் செயலா் பி.இஸ்மாயில் கூறியது:
சா்வதேச தர வரிசை பட்டியலுக்காக அகில இந்திய அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சா்வதேச வீரா்கள், சா்வதேச அளவிலான நடுவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா். மொத்தம் ரூ. 2 லட்சத்துக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 8, 10, 12, 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இந்தப் போட்டியில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோா் பங்கேற்வுள்ளனா். மேலும் விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட வீரா்கள் 90434 27661, 90801 81709 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.