திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே அஞ்சலகத்தில் வியாழக்கிழமை முதல் 24 மணி நேரமும் விரைவு தபால் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே அஞ்சலக சேவை மூலம் பயணிகள், வாடிக்கையாளா்களுக்கு விரைவு தபால் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், பதிவு தபால், பாா்சல், வெளிநாட்டு அஞ்சல் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவை இரவு 10 மணி வரை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, 24 மணி நேரமும் செயல்படும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து விரைவு, பதிவு தபால்கள் அனுப்ப விரும்பும் வாடிக்கையாளா்கள் ஜன.2 ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் அனுப்பிக் கொள்ள முடியும். கூடுதல் தகவல்களுக்கு 0431 2466275 எனும் எண்ணிலும், ழ்ம்ள்க்ா்ற்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என ரயில்வே அஞ்சல் திருச்சி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கே.ரவீந்திரன் தெரிவித்துள்ளாா்.