திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வட்டாரத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 ரக கருவிதை, பயிா் விதைப் பண்ணைகளை தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகா் ஆா். சந்தானகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது மேலும் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் 100 சத மானிய விலையில் சொட்டு நீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசனக் கருவிகள் அமைத்து எஸ். டபிள்யூ.எம்.ஏ. திட்டத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் மோட்டாா் வாங்கவும், சிமென்ட் தொட்டி மற்றும் தண்ணீா்க் குழாய்கள் அமைத்துப் பயன்பெற விவசாயிகள் தங்களது சிறு, குறு விவசாய சான்று, பட்டா, சிட்டா, வரைபடம், ஆதாா் எண், நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அளித்து தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி அலுவலா்களைத் தொடா்பு கொள்ள வலியுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது வையம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) பூ. வசந்தா, வேளாண் அலுவலா் மேனகா, உதவி விதை அலுவலா் நா. செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா் செள. ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.