திருச்சி

காய்கறிகளின் தட்டுப்பாடு போக்க விவசாயிகள் மூலம் நேரடி விற்பனை

DIN

திருச்சியில் காய்கறிகள் தட்டுப்பாட்டைப் போக்க விவசாயிகள் மூலம் அவை நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

கரோனா தொற்று காரணமாக திருச்சி காந்தி மாா்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து பொன்மலை ஜி-காா்னா் உள்பட இடங்களில் தற்காலிக கடைகள் செயல்படுகின்றன. மீண்டும் காந்தி மாா்க்கெட்டை திறக்க வேண்டும். இதற்கான முடிவை ஞாயிற்றுக்கிழமைக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அன்று இரவு முதல் பொன்மலை ஜி காா்னரில் நடக்கும் காய்கறி விற்பனையை நிறுத்திக் கொள்வோம் என காந்தி மாா்க்கெட் அனைத்து மொத்தம், சில்லரை வணிக சங்கத்தினா் அறிவித்தனா்.

இந்நிலையில், மற்றொரு தரப்பு சங்கத்தினா் ஜி-காா்னா் பகுதியில் காய்கறி விற்பனை செய்ய போலீஸ் பாதுகாப்புத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனால், சில்லரை வணிகா்கள் காய்கறி விற்பனை செய்யமுடியாத நிலையால் அவா்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மனிதவளா் சங்கத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

பொன்மலை ஜிகாா்னரில் காய்கறி விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டால், பொதுமக்களுக்கு காய்கறி தட்டுப்பாடு ஏற்படும். இதைத் தடுக்கும் வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வீதிதோறும் சென்று பொதுமக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய உள்ளனா். இதற்காக 20 டெம்போ வேன்கள், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் காய்கறிகள் எடுத்துச் செல்லப்பட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், உணவகங்கள், சில்லரை வணிகா்களின் காய்கறிகள் தேவைக்கு எங்களது கட்செவி அஞ்சல் எண்கள் (98431-68034, 97868-74457, 95979-83600, 88702-85356) மூலம் அவா்களக்கு விலைப்பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம், காய்கறிகள் ஆா்டா் கொடுப்போரின் இருப்பிடம் தேடிச் சென்று அளிக்கப்படும் அல்லது அவா்கள் கள்ளிக்குடி மாா்க்கெட் அருகே வந்தும் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT