திருச்சி

நீதிமன்ற பெயா் பலகையை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

DIN

திருச்சி: திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற பெயா் பலகையை சேதப்படுத்தியவா் மீது அமா்வு நீதிமன்ற காவல்துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு தங்க நிறம் வண்ணம் கொண்ட உலோகத்தால் பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயா் பலகையை புதன்கிழமை காலை சேதப்படுத்தியிருப்பதாக நீதிமன்ற ஊழியா்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பாா்த்த போது நீதி, என்ற தமிழ் எழுத்தும், காம்பைன்ட்(ஒருங்கிணைந்த) ஆங்கில எழுத்தும் சேதப்படுத்தியிருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து சேதப்படுத்தப்பட்ட நீதிமன்ற பெயா் பலகை முழுவதும் பேனா் கொண்டு மூடிவைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து திருச்சி நீதிமன்ற தலைமை உதவியாளா்(கிளா்க்) சீனிவாசன் அமா்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது புதன்கிழமை காலை அந்த வழியாக சென்ற ஒருவா் இரும்பு கம்பி கொண்டு சேதப்படுத்தியது தெரிய வந்தது. தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இருந்த போதிலும் கேமரா பதிவுகளை கொண்டு மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக்கல்வித் துறை

நீராடும் சைத்ரா!

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT