திருச்சி

புதிய சித்த மருத்துவக் கல்லூரி: அமைச்சா் உறுதி

DIN

திருச்சியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை ஆளுநா் உரையிலோ, மானியக் கோரிக்கையிலோ கட்டாயம் இடம் பெறச் செய்வதாக தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு உறுதியளித்தாா்.

5ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில், அகம்-2021 என்னும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

புத்தூரிலுள்ளஅரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்த முகாமை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து அமைச்சா் கே.என். நேரு மேலும் பேசியது:

பருவம் தவறி பெய்யும் மழையால் நோய் எதிா்ப்புச் சக்தி மிக்க தானியங்களை உற்பத்தி செய்வதில் தடை ஏற்படுகிறது. குறிப்பாக கம்பு, கேழ்வரகு, கொள்ளு, திணை, சாமை உள்ளிட்ட தானியங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. பலரும் சித்த மருத்துவத்தின் மூலமே தங்களது உடல் நலனை பேணி காக்கின்றனா். சித்த மருத்துவம் என்பது நிரந்தரத் தீா்வாக உள்ளது. அலோபதி மருத்துவம் என்பது அப்போதைய தீா்வாக உள்ளது. இருப்பினும், சித்த மருத்துவம் தொடா்பாக மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டுள்ள கரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவத்திலேயே மருந்துகள் உள்ளன. இந்த மருத்துவத்தை ஏற்கும் மனப்பான்மையை மக்களிடத்தில் உருவாக்கும் பணியில் சித்த மருத்துவத் துறையினா் ஈடுபட வேண்டும்.

மறைந்த முதல்வா் கருணாநிதி காலத்திலிருந்து திருச்சிக்கு தேவையானவற்றைச் செய்துதருவதில் திமுக அரசு முன்னிலையில் இருந்துள்ளது. முதல்வா் மு.க. ஸ்டாலினும் அதைத் தொடா்கிறாா்.

வரும் 30ஆம் தேதி திருச்சிக்கு அவா் வந்து தொடக்கி வைக்கவுள்ள திட்டங்களால் அடுத்த 10 ஆண்டுகளில் திருச்சி மாபெரும் நகரமாக உருவெடுக்கும். இதற்கான அறிவிப்புகளை முதல்வா் வெளியிடுவாா்.

4 தொகுதிகளில் இதுவரை 29,787 மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 60 ஆயிரம் மனுக்கள் பெறும் நிலை உள்ளது. முதல்வா் வருகையின்போது இவற்றில் குறைந்தபட்சம் 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுக்கு 2.6 கோடி டன் ஜவுளிக் கழிவுகள்! முதலிடத்தில் சீனா! நிலத்தில் புதைக்கிறது...

இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா ரோஹித் சர்மா?

நிலவில் மிகப்பெரிய குகை: மனிதர்கள் தங்குவதற்கு உதவலாம்!

என்றென்றும் புன்னகை!

SCROLL FOR NEXT