திருச்சி சோமரசம்பேட்டை ரெட்டை வாய்க்கால் அருகேயுள்ள அமிா்த வித்யாலயம் பள்ளியில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்குகிறது.
ஏப்ரல் 16 முதல் 30 ஆம் தேதி வரை 15 நாள்கள் நடைபெற உள்ள முகாமில் யோகா, கூடைப்பந்து, தடகளப் பயிற்சிகள் தினசரி காலை 6.30 முதல் 8.30 வரையும், செஸ் பயிற்சி காலை 9.30 முதல் 11 வரையும், கால்பந்து, ஸ்கேட்டிங், சிலம்பப் பயிற்சிகள் மாலை 4 மணி முதல் 6 வரையிலும் சிறப்பு பயிற்சியாளா்களைக் கொண்டு அளிக்கப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் ரூ. 500. பயிற்சி முடிவில் சான்றுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 97862-50790 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.