திருச்சி

காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேட்டூா் அணையிலிருந்து அதிகப்படியான நீா் திறந்து விடப்படுவதால், முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி உபரி நீா் திறந்து விடப்படும். மேலும் நீா்வரத்தைப் பொறுத்து, படிப்படியாக உபரி நீா் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள காரணத்தால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரக் கிராமங்களிலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், சலவைத் தொழிலாளா்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீா்வரத்து விவரத்தை அவ்வப்போது தெரிந்து கொண்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரி, கொள்ளிடம் சாா்ந்த நீா்நிலைகளில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவா்களோ செல்பி எடுக்க அனுமதி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து விலகுகிறேனா? உண்மை உடைத்த ராஜீ

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 12 பேர் படுகாயம்!

TVK & ADMK | ”அதிமுக பற்றி தவெக பேசாததில் உங்களுக்கு என்ன கஷ்டம்?” எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பும் மக்கள்! சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

பஞ்சாப்: ரயிலில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயம்

SCROLL FOR NEXT