திருச்சியில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ. 17.07 லட்சம் மதிப்பிலான 310 கிராம் தங்க நகையை சுங்கத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
திருச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னா், விமான இருக்கைக்கு அடியில் கிடந்த பொட்டலத்தில் 310 கிராம் தங்கச் சங்கிலி இருந்ததை விமான ஊழியா்கள் கண்டனா். இதையடுத்து அந்தத் தங்கத்தை சுங்கத் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா்.