திருச்சி

நாளை மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

DIN

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் மகளிருக்கான பிரத்யேக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.25) நடைபெறுகிறது.

முகாமில் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆலைக்கான நிரந்தரப் பணியிடங்களுக்கு பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

18 முதல் 26 வயது வரை உள்ள 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற உயா் கல்வியைத் தொடர இயலாத பெண்களுக்கு இந்த முகாம் நடைபெறுகிறது. பட்டதாரிகள் பங்கேற்க வேண்டாம். 12ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பெண்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். மாத ஊதியம் தொடக்க நிலையில் ரூ.16,557 மற்றும் போனஸ் வழங்கப்படும். வருங்கால வைப்புநிதி, தொழிலாளா் ஈட்டுறுதித் திட்டம், கிராஜுவிடி உள்ளிட்ட அனைத்து பலன்களும் வழங்கப்படும்.

தகுதியுள்ளோா் தோ்ந்தெடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவா். இந்தப் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு இளநிலை தயாரிப்பியல் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். பணிக்காக எந்த ஒப்பந்தமும் கிடையாது. தங்குமிடம், பாதுகாப்பான வசதி, ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குள்பட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும். பணியாற்றும்போதே வெவ்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பல உயா்நிலை பதவிகளுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. புதிய இயந்திரங்களை இயக்கும் வாய்ப்பையும் பெறலாம்.

எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் வேலை நாடுநா்கள் தங்களது புகைப்படம், அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்பு மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். இந்த முகாமுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0431-2413510 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

SCROLL FOR NEXT