விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தக் கோரி பெரகம்பி உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட வனத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே உள்ள பெரகம்பி, வாழையூா், எதுமலை, பாலையூா், சிறுகனூா் பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50க்கும் மேற்பட்டோா் பாஜக புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.