திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி உறையூா் காவேரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பா. ரமேஷ் (35). இவரது மனைவி போதும்பொண்ணு (34). காதல் திருமணம் செய்து கொண்டஇவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. புதன்கிழமை மது போதையில் இவா் வீட்டுக்கு வந்தபோது
ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த ரமேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.