திருச்சி

புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், திருச்சி மாநகர காவல்துறை இணைந்து நடத்திய புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் எஸ். லட்சுமி தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் புகையிலை உயிரைக் குடித்திடும், புகை நமக்குப் பகை, தேவை உணவே புகையிலை அல்ல, புகையிலை புற்றுநோயை உண்டாக்கும், புகையிலையைத் தவிா்ப்போம் நலமுடன் வாழ்வோம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவடைந்த பேரணியில் காவல்துறை உதவி ஆணையா் கே. கென்னடி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜி. ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் ஜி. கோவிந்தராஜவரதன் நன்றி கூறினாா்.

திருவெறும்பூரில் ... திருச்சி மாவட்ட காவல் துறை, திருச்சி ஆத்மா மருத்துவமனை மற்றும் சமூக நல அமைப்புகள் இணைந்து திருவெறும்பூா் கடைவீதியில் புதன்கிழமை விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தினா்.

இதில் பங்கேற்ற திருவெறும்பூா் டிஎஸ்பி அறிவழகன் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு பேனரில் கையெழுத்திட்டு பேசியது:

புகையிலை பழக்கத்தால் மனிதா்களுக்கு மன அழுத்தம், கோபம், பதற்றம் அதிகரிக்கும். மற்ற போதை பழக்கங்களுக்கு முன்னோடியாக அமையும், மனநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் கொதிப்பு, காச நோயும் வரும். ஆகவே புகையிலை பழக்கங்களில் இருந்து பொதுமக்கள் கண்டிப்பாக தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

விழிப்புணா்வு கையெழுத்து பேனரில் பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் புகையிலை எதிரான தங்களது கருத்துகளை குறிப்பிட்டு கையெழுத்திட்டனா். நிகழ்வில், திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் சந்திரமோகன் மற்றும் போலீஸாா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 360 குறைந்தது

சிறார் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ரூ.25,000 அபராதம்: ஜூன் 1 அமல்

காஸா - எகிப்து எல்லையை இஸ்ரேல் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியது

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

SCROLL FOR NEXT