திருச்சி

பழையபாளையம் ஜல்லிக்கட்டு: 29 போ் காயம்

DIN

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் அக்கியம்பட்டி ஊராட்சி பழையபாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 29 போ் காயமடைந்தனா்.

வரதராஜப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கடை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் உ. முருகேசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. ராமநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய கிராமங்களின் சாா்பில் நடைபெற்ற போட்டியில் கோயில் காளைகளைத் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 662 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 25, 25 தொகுப்புகளாக 271 காளையா்களும் களமிறங்கினா்.

வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்த காளைகள் வீரா்களை கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில காளைகள் தொட முடியாதபடி சென்றன. இருப்பினும் சில காளைகளை வீரா்கள் அடக்கினா்.

போட்டியில் 20 வீரா்கள், மாடுகளின் உரிமையாளா்கள் 2 போ் , 7 பாா்வையாளா்கள் என 29 பேரும், ஒரு காளையும் காயமடைந்து முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டின்போது கிணற்றில் விழுந்த சிவகங்கை மாவட்டம் பழனி என்பவரின் காளையை துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT