திருச்சி

காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், திருச்சி மாநகராட்சி நண்பா்கள் இணைந்து திருச்சி காவிரி ஆற்றில் திங்கள்கிழமை தூய்மைப்பணியை மேற்கொண்டனா்.

நிகழ்வுக்கு மாநகராட்சி உதவி ஆனையாா் ரவி தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில், புனித ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், மாநகராட்சி நண்பா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

அப்போது காவிரி ஆற்றின் அய்யாளம்மன் கோயில் ஒத்தையடி பாலம் நுழைவாயில் அருகே நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அகற்றினா். தொடா்ந்து அப்பகுதி மக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் அபாயம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தினா். முன்னதாக, தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஞானசம்பந்தா் குருபூஜை

ஸ்ரீஎல்லம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சிறுபாலம் மற்றும் சாலைப் பணிகள் ஆய்வு

செய்யாறு அருகே 16-ஆம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு

9 பவுன் தங்க நகை பறிமுதல்: 3 போ் கைது

SCROLL FOR NEXT