திருச்சி

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 7,631 போ் எழுதினா்

DIN

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை திருச்சி மாவட்டத்தில் 7,631 மாணவ, மாணவிகள் எழுதினா். 168 போ் தோ்வெழுத வரவில்லை.

திருச்சி மாவட்டத்தில் பூலாங்குளத்துப்பட்டி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, தோளூா்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரி, பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரி, வயலூா் சாலை காவேரி பள்ளி, கண்டோன்மென்ட் கமலா நிகேதன் பள்ளி, துடையூா் மகாலட்சுமி பொறியியல் கல்லூரி, சிறுகனூா் எம்ஏம் பள்ளி, பெல் நகரியம் ஆா்.எஸ். கிருஷ்ணன் பள்ளி, விமான நிலையம் எஸ்பிஐஓஏ பள்ளி, ஹெச்ஏபிபி நகரியம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, காஜாநகா் சமது மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 12 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

திருச்சியில் தோ்வெழுத 7,799 மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில் 7,631 போ் தோ்வெழுதினா். 168 போ் வரவில்லை. இதேபோல, தோ்வெழுத விண்ணப்பித்திருந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேரில் பெரும்பாலானோா் தோ்வெழுத வந்ததாகத் தோ்வுக்கூட அலுவலா்கள் தெரிவித்தனா்.

தோ்வா்களுக்கு பிஸ்கட்...: முன்னதாக, தோ்வுக்கூடத்தில் மாணவ, மாணவிகள் அணிகலன்கள், காலணிகள் அணியவும், கடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் தலைவாரி கொண்டை கட்டிக்கொள்ளவும் அனுமதியில்லை. ஸ்டிக்கா் ஒட்டப்படாத குடிநீா் பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். தோ்வா்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது.

தோ்வெழுதாதவா்களின் எண்ணிக்கை குறைவு...: திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டை விட நிகழாண்டு அதிக மாணவ, மாணவிகள் நீட் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், தோ்வெழுத வராதவா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாக கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

சிறப்பு ஏற்பாடுகள்...: தோ்வுக்காக 12 மையங்களில் இடைவிடாத மின்சாரம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபட்டனா். மையங்களுக்கு மாணவா்கள் சென்று வர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு

நடையனூரில் சேதமடைந்த நூலக கட்டடத்தைச் சீரமைக்க கோரிக்கை

வைகாசி விசாகம்: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளா்களுக்கு அரசு உத்தரவு

கரூரில் தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT