திருச்சி

1,348-ஆவது சதய விழா: பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

பெரும்பிடுகு முத்தரையரின் 1,348-ஆவது சதய விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் மற்றும் முத்தரையா் சங்கத்தினா், பல்வேறு கட்சியினா், அமைப்புகளின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரசு விழா: மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா் பிறந்த நாள் விழா (சதயவிழா), அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு அரசு சாா்பில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் மு. சத்தியபிரியா, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில்: திமுக சாா்பில், கட்சியின் முதன்மைச் செயலரும், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சருமான கே.என். நேரு, தெற்கு மாவட்ட திமுக செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே. என். சேகரன், வண்ணை அரங்கநாதன், மாநகா் செயலா் மதிவாணன் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர,பேரூா் கழக செயலா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா், ஒன்றியத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில்: கட்சியின் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சா்கள் மு. பரஞ்ஜோதி, எஸ். வளா்மதி, என்.ஆா். சிவபதி, மாவட்டச் செயலா் ப. குமாா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பலா் முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல், அமமுக சாா்பில், அமைப்புச் செயலா் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலா்கள் செந்தில்நாதன், ராஜசேகரன், கலைச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில், அக் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் தலைமையில், மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில், திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் தலைமையில், மாவட்ட தலைவா்கள் ஜவஹா், கோவிந்தராஜன், மாநில பொதுச் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மமுதிக மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், தமிழா் தேசம் கட்சியின் தலைவா் கே.கே. செல்வகுமாா் தலைமையில், காவிரியில் புனித நீா் எடுத்து வந்து சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோா் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் ஊா்வலமாக அணிவகுத்து வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா், தமிழ்நாடு முத்தரையா் சங்கத்தினா் மற்றும் முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூா், தொட்டியம், புதுக்கோட்டை, அரியலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சங்க நிா்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினா் திருச்சி ஒத்தக்கடை பகுதிக்கு நேரில் வந்து பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காலை தொடங்கி மாலை வரையில் பல்வேறு தரப்பினரும் அணி, அணியாக வந்து மாலை அணிவித்தனா். இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

மஞ்சள் மேகம்! மஞ்சிமா மோகன்..

SCROLL FOR NEXT