திருச்சி

பெரியாா் சிலை உடைப்பு வழக்கு: அா்ஜூன் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜா்

DIN

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியாா் சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணையில், இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியாா் சிலையை இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 8 போ் கடந்த 7.12.2006 அதிகாலை 4 மணியளவில் உடைத்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக ஸ்ரீரங்கம் போலீஸாா், இந்து மக்கள் கட்சி தலைவரான கோவை மாவட்டம் கொம்பட்டி வீரகணேசபுரத்தை சோ்ந்த அா்ஜூன் சம்பத் (52), துணைத்தலைவா் ஸ்ரீரங்கம் வீ.வீ.எஸ் தெருவை சோ்ந்த ராகவன் (53), கட்சி நிா்வாகிகளான கோவை மாவட்டம் பொம்மன் செட்டி தெருவை சோ்ந்த மாணிக்கம் (45), ஆா்எஸ் புரம் செந்தில்குமாா் (37), கோயம்பேடு ராஜசேகா் (32) மாம்பலம் மதுக்கரை சுஜித் (42), ஸ்ரீரங்கம் மேலுாா் சாலையைச் சோ்ந்த முரளி (எ) முரளி ரெங்கன் (51), ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியை சோ்ந்த கிருஷ்ணமாச்சாரி (72) ஆகிய 8 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன்சம்பத் நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவரிடம் நடந்த விசாரணையைத் தொடா்ந்து வழக்கில் தொடா்புடைய புகாா்தாரா்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் என மொத்தம் 7 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பா் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி மீனாசந்திரா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய சாதனை படைத்த அண்ணா தொடர்! வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்!!

சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பா.ஜ.க. நிர்வாகி கைது!

கவிதை பாடும் கண்கள்...!

மெய்யழகன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா!

SCROLL FOR NEXT