திருச்சி

கேலோ இந்தியா மல்லா் கம்பம் போட்டிகள்

DIN

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் மல்லா் கம்பம் போட்டிகளில் ஒட்டுமொத்த அணி பிரிவில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 217 போ் 23 அணிகளாகக் கலந்து கொண்டனா். இதில், ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கான போட்டிகளும், திங்கள்கிழமை பெண்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.

இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த மகாராஷ்டிர அணி 209.25 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும் வென்றது. 207.35 புள்ளிகள் பெற்ற தமிழக அணி இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 205.30 புள்ளிகள் பெற்ற மத்தியபிரதேச அணி மூன்றாமிடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றது.

முதல்முறையாக..: மல்லா் கம்பம் போட்டிகளில் தமிழக அணி இதுவரை தனிநபா் பிரிவில் மட்டுமே வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது முதல்முறையாக அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

ஏற்கெனவே 4 முறை தங்கம் வென்ற மகாராஷ்டிர அணியிடம், வெறும் 2.10 புள்ளிகளில் மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், கடந்தாண்டு தங்கம் வென்ற மத்தியபிரதேசத்தை மூன்றாமிடத்துக்கு தள்ளி தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

இரண்டாவது நாளாக அனுமதி மறுப்பு: தமிழக அணி வெள்ளி வென்று சாதனை படைத்துள்ள நிலையில், அதனை கண்டு கைதட்டி உற்சாகப்படுத்தக் கூட பாா்வையாளா்கள் இல்லாதது விளையாட்டு வீரா்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகமும், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் கவனம் செலுத்த வேண்டும் என விளையாட்டு ஆா்வலா்கள் தெரிவித்தனா். இதேபோல, செய்தியாளா்களுக்கும் வெற்றிப் பெற்றவா்களின் விவரங்களை தெரிவிக்கக் கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

இதுகுறித்து மல்லா் கம்பம் போட்டி மேலாளா் திலீப் கவானே கேட்டபோது, இணையதளத்தில் நுழைவுச்சீட்டு பெற்றவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் அனுமதிக்கப்படுவா். செய்தியாளா்களின் பிரச்னைகள் களையப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT