திருச்சி

பொறியியல் பணிகள்: ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக, ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16849) வரும் 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மானாமதுரை - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - மானாமதுரை இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது (16850) வரும் 8, 9, 10, 13-ஆம் தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மானாமதுரை - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 11, 14, 17-ஆம் தேதிகளில் திருச்சி - முத்தரசநல்லூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு - முத்தரசநல்லூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 11, 14, 17-ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 11, 14, 17-ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஈரோடு - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 9, 10, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 12, 16-ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்தும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 11 ஆம் தேதியும், குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 8, 9, 10, 11, 12 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 10 ஆம் தேதியும் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்தும், விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT