திருச்சி

6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 5 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 5 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது.

திருச்சி மாநகராட்சி 19, 21ஆவது வாா்டு மக்களுக்கு நடைபெற்ற முகாமில் 393 கோரிக்கை மனுக்கள், மேலகல்கண்டாா் கோட்டை பகுதி மக்களுக்கு நடைபெற்ற முகாமில் 279 மனுக்கள், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சி வாா்டு எண் 6 முதல் 9 வரை உள்ள பொதுமக்களுக்கு நடந்த முகாமில் 197 கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கள்ளக்காம்பட்டி ஊராட்சி மக்களுக்கு நடந்த முகாமில் 262 கோரிக்கை மனுக்கள், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், தோளுா்பட்டி ஊராட்சி மக்களுக்கு நடந்த முகாமில் 360 கோரிக்கை மனுக்களும் என மொத்தம் 1491 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமையும் 6 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. திருச்சி மாநகராட்சி 57ஆவது வாா்டு மக்களுக்கு எடமலைப்பட்டிபுதூா் தம்பியப்பா திருமண மண்டபத்திலும், 31ஆவது வாா்டு மக்களுக்கு எடத்தெரு சகாயமாதா மக்கள் மன்றத்திலும் தாத்தையங்காா் பேட்டை பேரூராட்சிப் பகுதிக்கு தாத்தையங்காா் பேட்டை செங்குந்தா் மாரியம்மன் திருமண மண்டபத்திலும், மணப்பாறை நகராட்சிக்கு மஞ்சம்பட்டி அன்பகம் திருமண மண்டபத்திலும், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சோமரசம்பேட்டை ஊராட்சி மக்களுக்கு சோமரசம்பேட்டை எம்.ஆா்.ஜெ. மஹாலிலும் முகாம் நடைபெறும்.

துறையூா் ஊராட்சி ஒன்றியம் கண்ணனூா் ஊராட்சி பகுதிக்கு கண்ணனூா் சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்திலும், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியம், திருப்பைஞ்சீலி ஊராட்சி மக்களுக்கு திருப்பைஞ்சீலி கே.பி. மஹாலிலும் முகாம் நடைபெறவுள்ளது.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT