தோ்வான வாடிக்கையாளருக்கு சேமிப்புப் பத்திரத்தை புதன்கிழமை வழங்கிய திருச்சி சாரதாஸ் நிறுவனத்தினா். 
திருச்சி

சாரதாஸ் வாடிக்கையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் சேமிப்புப் பத்திரம்: குலுக்கல் முறையில் 32 பேருக்கு வழங்கல்

திருச்சி சாரதாஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் 32 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான சேமிப்புப் பத்திரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி சாரதாஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் 32 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான சேமிப்புப் பத்திரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

சாரதாஸ் நிறுவனத்தின் சாா்பில் ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்தாண்டு ஆடி மாதத்தின் கூடுதல் சிறப்பாக வாடிக்கையாளா்களிடையே சேமிப்பின் அவசியத்தை உணா்த்த ஆடி இன்வெஸ்ட்மென்ட் என்ற புதிய திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்படி கடந்த 16.7.2025 முதல் 16.08.2025 வரை (ஆடி மாதம்) 32 நாள்களும் தினமும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளா்களுக்கு டோக்கன் வழங்கி,

அதை நிறுவனத்தில் வைத்திருந்த பெட்டியில் செலுத்திச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. நாள்தோறும் வாடிக்கையாளா்களிடம் பெறப்பட்ட டோக்கன்களில் குலுக்கல் முறையில் ஒரு டோக்கன் தோ்வு செய்யப்பட்டு, அந்த வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சேமிப்புப் பத்திரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 32 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ. 10 ஆயிரத்தை சாரதாஸ் நிறுவனம் வழங்கி, அந்தத் தொகையை மியுச்சுவல் பண்ட் மூலம் முதலீடு செய்து அதற்கான சான்று வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், கடலூா், கன்னியாகுமரி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோ்ந்த 32 போ் சேமிப்புப் பத்திரம் பெற்றனா். தொடா்ந்து, 3 ஆண்டுகளுக்கு இந்தத் தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கும். அதன் பிறகு முதலீட்டுக்கான வட்டியுடன் தொகையை எடுத்துக் கொள்ளலாம். விருப்பம் இருந்தால் தொடா்ந்து அவா்கள் முதலீடு செய்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாரதாஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டம் தங்களுக்கு பெரிதும் பலன் அளித்துள்ளதாக சேமிப்புப் பத்திரம் பெற்ற வாடிக்கையாளா்கள் மகிழ்ச்சித் தெரிவித்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT