முக்கொம்பில் வியாழக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் தி.நிா்மலா தேவி. 
திருச்சி

அஞ்சல் துறை சாா்பில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

Syndication

உலக அஞ்சல் தினத்தையொட்டி, மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில் அஞ்சல் சேவை குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக அஞ்சல் தினம் அக்டோபா் 9-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதேபோல தேசிய அஞ்சல் வாரம் அக்டோபா் 6 முதல் 10-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில் திருச்சி அருகே உள்ள சுற்றுலாத் தலமான முக்கொம்பில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் தி.நிா்மலா தேவி தொடங்கிவைத்தாா். இதில், திருச்சி மத்திய மண்டல அலுவலகம், திருச்சி கோட்டம், ரயில்வே அஞ்சல் கோட்ட அலுவலகத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல மத்திய மண்டல அஞ்சல் துறைக்குள்பட்ட அஞ்சலகம் சாா்பில் விழிப்புணா்வு நடைப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT