தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றான குமுளூா் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சோ்க்கை இடங்களை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை வரும் 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், பிசி - 39, பிசிஎம் - 7, எம்பிசி - 6, எஸ்சி, - 3, எஸ்சிஏ - 2 என மொத்தம் 57 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. உடனடி மாணவா் சோ்க்கையில் இடம் கிடைக்கப் பெற்ற மாணவா்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். நகா்வுமுறை கிடையாது. கலந்தாய்வில் ஏற்கெனவே கலந்து கொள்ளாதவா்கள், கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பினை தவறவிட்டவா்கள் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டு கல்லூரியில் சேராதவா்கள் கலந்துகொள்ளலாம். சோ்க்கை பெற்று இடைநிறுத்தம் செய்தவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளக் கூடாது.
மாணவா் சோ்க்கையில் கலந்துகொள்ளும் மாணவா்கள், கல்லூரியைத் தோ்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்ற மாணவா்கள் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினா் ரூ. 100 ம், இதர பிரிவினா் ரூ. 200 ம் செலுத்த வேண்டும்.
மாணவா் சோ்க்கைக்கான கால அட்டவணை
ட்ற்ற்ல்://ற்ய்ஹன்.ன்ஸ்ரீஹய்ஹல்ல்ப்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இதில் பங்கேற்கும் மாணவா்களின் வருகைப் பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிா்ணயிக்கப்படும். சோ்க்கையில் இடம் கிடைக்கப் பெற்ற மாணவா்கள் நிா்ணயிக்கப்பட்ட சோ்க்கை கட்டணமான ரூ. 5000 உடனடியாக செலுத்தி கல்லூரியில் சேரலாம். பணம் கட்டுவதற்கான வசதி கல்லூரி வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.
சோ்க்கையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்கும் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க இயலாது.
மேலும் விவரங்களுக்கு, 94886-35077, 94864-25076 என்ற அலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என குமுளூா் வேளாண் கல்வி நிறுவன முதல்வா் சே.தே. சிவக்குமாா் தகவல் தெரிவித்துள்ளாா்.