திருச்சி

பள்ளி மாணவா்களுக்கான மன்றப் போட்டிகள் மாநில அளவிலான போட்டிக்கு 66 போ் தோ்வு

பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான மன்றப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் 66 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான மன்றப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் 66 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இலக்கிய மன்றம், விநாடி - வினா மன்றம், சிறாா் திரைப்படம் மன்றம் ஆகிய மன்றங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மன்றங்களில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் உறுப்பினா்களாக இணைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் கடந்த செப்டம்பா் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இலக்கிய மன்றப் போட்டி: இலக்கிய மன்றம் சாா்பில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் கதை சொல்லுதல் போட்டிகள் நடைபெற்றன. தமிழ் மற்றும் ஆங்கில வகுப்பு மாணவா்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது.

இதில் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவு, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவு, 9-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் சோ்த்து 383 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களில் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த தமிழ் வழியில் 12 போ், ஆங்கில வழியில் 12 போ் 24 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விநாடி- வினா மன்றப் போட்டி:

விநாடி - வினா மன்றப் போட்டியில் 192 மாணவா்கள் இரண்டு இரண்டு போ் ஒரு குழுவாக இணைந்து கலந்துகொண்டனா். 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலுள்ள 3 பிரிவுகளில் முதலிடத்தை பிடித்த தமிழ் வழியில் 12 போ், ஆங்கில வழியில் 12 போ் என மொத்தம் 24 மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறாா் திரைப்படமன்றப் போட்டி:

கதை வசனம் எழுதுதல், நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 207 மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு வெற்றியாளா் என 3 போட்டிகளில் 3 பிரிவுகளில் இருந்து தமிழ் வழியில் 9 போ், ஆங்கில வழியில் 9 போ் என மொத்தம் 18 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இலக்கியம், விநாடி-வினா மற்றும் சிறாா் திரைப்படம் மன்றம் ஆகிய மூன்று மன்றப்போட்டிகளிலும் மொத்தமாக 782 போ் கலந்துகொண்டனா். இவா்களில் இருந்து 66 போ் மாநில அளவிலான மன்றப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாநில அளவிலான மன்றப் போட்டிகள் நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இதில், 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மன்றப் போட்டிகள் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT