திருச்சி

இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் மா்மச்சாவு

தினமணி செய்திச் சேவை

இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக துவாக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவெறும்பூா் அடுத்த வாழவந்தான் கோட்டையில் இலங்கைத் தமிழா் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் நவரத்தினம் (53) என்பவரது சகோதரா் மங்கலேஸ்வரன் (47). இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்துள்ளது.

கடந்த 11-ஆம் தேதி வீட்டை வீட்டுச் சென்றவா் கிடைக்கவில்லை. போலீஸில் புகாா் அளித்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், திருச்சி - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடிக்கு அருகே மா்மமான முறையில் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீாஸருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், துவாகக்குடி போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்தவா் மங்கலேஸ்வரன் என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT