திருச்சி

கரூா் சம்பவத்தில் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்! ஜோதிமணி எம்.பி

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவத்தில் மக்ககளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

கரூா் சம்பவத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கான சரியான விசாரணை நடக்க வேண்டும். சிபிஐ விசாரணையில் மட்டும் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது என்பதால், விசாரணையை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தக் குழுவில் ஒருவராக அஸ்ரா காா்க் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மாதம் ஒருமுறை சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், விசாரணை எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாது. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.

இந்த வழக்கு இன்னும் முடியவில்லை இது ஒரு இடைக்கால உத்தரவு தான். தமிழக வெற்றிக் கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு இந்த சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

ஏனெனில், கடந்த கால நடவடிக்கைகளால் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மீது சந்தேகம் எழுகிறது. இதுவரை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவை பாஜக ஆளும் மாநிலங்களில் விசாரணை என்ற பெயரே இல்லை.

பாஜக-வின் 11 ஆண்டுகால ஆட்சியில் இது போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். எனவேதான், சிபிஐ விசாரணை என்பதில் எங்களுக்கு அச்சம் உள்ளது. இருப்பினும் விசாரணையை கண்காணிக்க குழு அமைத்திருப்பது நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த விசாரணையை முடித்து மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT