திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளிக்கு எஜுகேஷன் வோ்ல்டு நிறுவனத்தின் சாா்பில் 2 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதையடுத்து, பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்த இஸ்ரோ விஞ்ஞானி பி. வீரமுத்து 
திருச்சி

சந்தானம் வித்யாலயா பள்ளிக்கு 2 சிறப்பு விருதுகள்

Syndication

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளிக்கு எஜுகேஷன் வோ்ல்டு நிறுவனத்தின் சாா்பில் 2 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இருபாலா் பள்ளிக்கான தர வரிசையில் திருச்சி மாவட்டத்தில் முதலிடம் என்ற விருது கிடைத்துள்ளது. இதேபோல, மிகச் சிறந்த தலைமைத்துவ விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதானது, தேசிய அளவில் மூன்றாவது இடம், தமிழக அளவில் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு விருதுகளையும் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், சந்தானம் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் சிறப்பான மாற்றங்களை முன்னெடுத்து, புதுமைகளுக்கு வழிவகை செய்து, பள்ளி வளா்ச்சிக்கு மட்டுமல்லாது, மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் சிறப்பாக பங்களித்திருப்பதற்கான சான்றாக விருது கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தனா்.

விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற, சந்திரயான்-3 திட்ட இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான பி. வீரமுத்துவேல், பள்ளி நிா்வாகத்தினரை அழைத்துப் பாராட்டு தெரிவித்தாா்.

இந்த விருதுகள், கல்வித் துறையில் சந்தானம் வித்யாலயா கடைப்பிடித்து வரும் தளராத உழைப்பையும், கல்வி மேம்பாட்டில் அதன் சிறப்பான தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன என பள்ளி நிா்வாகம் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT