திருச்சி அருகே கூத்தைப்பாரில் பெண் தொழிலாளியின் விரல்கள் சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கல்லணை அருகேயுள்ள தோகூா் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் மருதப்பா மனைவி மாரியம்மாள் (35). இவா் கூத்தைப்பாரைச் சோ்ந்த ஒருவரின் சிமென்ட் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இங்கு போதிய பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காததால் கடந்த 29 ஆம் தேதி பணி செய்தபோது, மாரியம்மாளின் வலது கையில் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் என மூன்று விரல்கள் சிமென்ட் கலவை கலக்கும் இயந்திரத்தில் சிக்கி துண்டாயின. இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து மருதப்பா அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.