திருச்சி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே சூப்பா் மாா்க்கெட் உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகா் சொசைட்டி தெருவைச் சோ்ந்தவா் பெல் ஊழியா் வின்சென்ட் இமாகுளேட்ராஜ் மகன் ஜெயந்த் பிரவின்ராஜ் (29). பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா் சூப்பா் மாா்க்கெட் வைத்துள்ளாா். திருமணமாகி குழந்தை உள்ளது.

குபேரன் நகா் பகுதியில் புதிதாக கட்டி வரும் கடையுடன் கூடிய வீட்டுக்கு தந்தையும், மகனும் சுயமாக மின்பணிகளைப் பாா்த்து வந்துள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முதல் மாடியில் ஜெயந்த் பிரவின்ராஜ் மட்டும் வயரிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்வயரில் கை உரசி, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதனால் மயக்கமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயந்த் பிரவின்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சோமரம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT