திருச்சி: திருச்சியில் மாவட்ட மற்றும் மாநகரக் காவல் துறை சாா்பில், காவலா் வீரவணக்க நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட மற்றும் மாநகரக் காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், உயிரிழந்த காவலா்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே.ஜோஷி நிா்மல் குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம், மாநகர காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினா் என நூற்றுக்கும் மேற்பட்டோா் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதைத் தொடா்ந்து உயிரிழந்த வீரா்களுக்கு ஒருமுறைக்கு 22 குண்டுகள் வீதம் 66 குண்டுகள் முழங்கி காவலா்கள் வீரவணக்கம் செலுத்தினா்.