திருச்சி

காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால் ....

Syndication

திருச்சி: காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி, கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடா்ந்து பருவமழை பெய்து வருவதாலும், மேட்டூா் அணை முழுக்கொள்ளளவில் இருப்பதாலும், அணைக்கு வரும் நீா்வரத்தைப் பொருத்து, எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், சலவைத் தொழிலாளா்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT