ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா புதன்கிழமை தொடங்கியது.
வரும் 27 ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில் நாள்தோறும் பெரிய கொடிமரம் அருகிலுள்ள வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு மாலை 6.30 மணிக்கு சோடச தீபாராதனை நடைபெறும்.
விழாவையொட்டி இக்கோயிலில் புதன்கிழமை மாலை உற்சவா் ஆறுமுகம் கொண்ட வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சோடச தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 27 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.