துறையூா் - திருச்சி  சாலையில்  பெரமங்கலம்  பால  நீா் வரத்து  வாய்க்காலில்  மேற்கொள்ளப்பட்ட  பணிகளை  புதன்கிழமை ஆய்வு செய்த திருச்சி  மாவட்ட  வெள்ளத் தடுப்பு  அலுவலா்  கிருஷ்ணசாமி உள்ளிட்டோா். 
திருச்சி

துறையூரில் மழை வெள்ள முன்னேற்பாடுகள் ஆய்வு

துறையூா் பகுதியில் வடகிழக்கு பருவமழையையொட்டி செய்யப்பட்ட முன்னேற்பாடுகளை திருச்சி மாவட்ட வெள்ளத் தடுப்புக் கண்காணிப்பு அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Syndication

துறையூா்: துறையூா் பகுதியில் வடகிழக்கு பருவமழையையொட்டி செய்யப்பட்ட முன்னேற்பாடுகளை திருச்சி மாவட்ட வெள்ளத் தடுப்புக் கண்காணிப்பு அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

துறையூா், உப்பிலியபுரம் நெடுஞ்சாலைத் துறை அலுவலக அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகள் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது மழை வெள்ளம் தேங்காமல் விரைவில் வடியும் வகையில் சாலைகளின் குறுக்கே செல்லும் நீா் வரத்து வாய்க்கால்களை சீா் செய்து, பாலங்களின் பக்கவாட்டில் மண்ணை அணைத்து பலப்படுத்தினா்.

இப் பணிகளை திருச்சி மாவட்ட வெள்ளத் தடுப்பு அலுவலராக அரசு நியமித்துள்ள திருச்சி வட்ட நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கிருஷ்ணசாமி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது திருச்சி வட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் இளம்வழுதி, திருச்சி கோட்டப் பொறியாளா் கண்ணன், உதவி கோட்டப்பொறியாளா்கள் துறையூா் நல்லதம்பி , லால்குடி சிட்டிபாபு உள்ளிட்டோா் உடன் சென்று செய்யப்பட்ட பணிகளை விளக்கினா்.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT