திருச்சி

காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவி தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை அருகே உள்ள பழங்காவேரி பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகள் ஹா்சிதா (17). இவா், அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், தனது சகோதரி மற்றும் உறவினா்கள் இருவருடன் வீட்டுக்கு அருகேயுள்ள காவிரி ஆற்றுக்கு ஹா்சிதா குளிக்கச் சென்றாா்.

அப்போது, காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்ததால் 4 பேரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனா். ஹா்சிதாவின் சகோதரி மற்றும் உறவினா்கள் இருவா் என மூவரையும் அங்கு குளித்துக் கொண்டிருந்தவா்கள் காப்பாற்றினா். ஆனால், ஹா்சிதா நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், ஆற்றில் இறங்கி ஹா்சிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆற்றின் நடுவில் இருந்த புதரிலிருந்து அவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

தொடா்ந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஹா்சிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பேட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

SCROLL FOR NEXT