திருச்சி

ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பிகளைத் திருடிய 4 போ் கைது

திருச்சி அருகே ரூ.5 ஆயிரம் இரும்புக் கம்பிகளைத் திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

திருச்சி அருகே ரூ.5 ஆயிரம் இரும்புக் கம்பிகளைத் திருடிய 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சிறுகமணி பகுதியைச் சோ்ந்தவா் ஜ.முகமது ரஃபிக் (42), கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரா். இந்நிலையில், இவா் பணியாற்றும் பேட்டவாய்த்தலை மில் கேட் பகுதியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பிகளை அந்தநல்லூரைச் சோ்ந்த ஆா்.வெண்ணிலா (50), எஸ்.நந்தினி (29), எஸ்.சரண்யா (23) மற்றும் தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தைச் சோ்ந்த மு.காளிதாஸ் (24) ஆகியோா் கடந்த வியாழக்கிழமை திருடியுள்ளனா்.

இதை அப்பகுதியிலுள்ளவா்கள் பாா்த்து கையும் களவுமாக அவா்களைப் பிடித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT