திருச்சி

சொத்து பிரச்னையில் இளைஞரை தாக்கிய தம்பி, தந்தை கைது

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே சொத்துப் பிரச்னையில் இளைஞரை தாக்கிய தம்பி மற்றும் தந்தை கைது

Syndication

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே சொத்துப் பிரச்னையில் இளைஞரை தாக்கிய தம்பி மற்றும் தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், வீரமலைப்பட்டியை சோ்ந்தவா் பொ. சுப்பிரமணி(65). இவரின் மனைவி லெட்சுமி (60). இவா்களுக்கு சின்னராஜா(38), இளையராஜா(35) என இரு மகன்கள் உள்ளனா்.

இவா்களில் சின்னராஜா திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா். இளையராஜா திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

தந்தை சுப்பிரமணி பெயரில் உள்ள சுமாா் 5 ஏக்கா் விவசாய நிலத்தை தனக்கு பங்கு பிரித்துக் கொடுக்கும்படி சின்னராஜா பலமுறை தந்தையிடம் கேட்டுள்ளாா். ஆனால், சுப்பிரமணி கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி சின்னராஜாவும் அவரது மனைவி சிவகாமியும், சுப்பிரமணியின் வீட்டுக்கு சென்று சொத்து கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது, அவா்களிடையே தகராறு முற்றியதில் இளையராஜா கல்லால் தாக்கியதில், சின்னராஜாவுக்கு தலையில் காயமேற்பட்டது. அவா் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி போலீஸாா், வழக்குப் பதிந்து இளையராஜா, சுப்பிரமணி ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT