திருச்சி அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பூதலூரைச் சோ்ந்தவரின் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள அசூரில் மரத்தில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக துவாக்குடி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே உள்ள ராயமுண்டான்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கா் (42) என்பதும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].