திருச்சி

மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, மாநகர போலீஸாா் சனிக்கிழமை இரவு சிறப்பு ரோந்து சென்றனா்.

அப்போது, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருமண்டபம் கோரையாற்றுக்கரை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த திருச்சி புங்கனூரைச் சோ்ந்த மா.சேட்டு (22) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, நீதிமன்றக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ராம்ஜி நகரைச் சோ்ந்த ஆ.கிஷோா் (29), பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த அ. சதீஷ்குமாா் (33), கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மன்னாா்புரத்தைச் சோ்ந்த ம.ராமச்சந்திரன் (45), காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு தாரநல்லூரைச் சோ்ந்த ஆா்.ராமகிருஷ்ணன் (23), பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த காஜாபேட்டையைச் சோ்ந்த ந.நிதின் (25), தென்னூரைச் சோ்ந்த ஜெ.சிவா (40) மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட அம்மாமண்டபம் சாலையைச் சோ்ந்த மு.பிரகாஷ் (22) ஆகிய 8 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT