வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்லூரி நிா்வாகிகள். 
வேலூர்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன. இதில் 6- அணிகள் போட்டியிட்டன.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் சாா்பில், கல்லூரி மாணவிகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன. இதில் 6- அணிகள் போட்டியிட்டன.

போட்டியில் வேலூா் ஆக்ஸிலியம் கல்லூரி மாணவிகள் அணி முதலிடமும், டி.கே.எம். கல்லூரி மாணவிகள் அணி 2- ஆம் இடமும் பெற்றனா். இதையடுத்து நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணிதலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் பி.ஞானகுமாா் வரவேற்றாா்.

கல்லூரியின் மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் மற்றும் திருவள்ளுவா் பல்கலைக் கழக வேலூா் மண்டல (மாணவிகள்) ஒருங்கிணைப்பாளா் மு.முரளி கிருஷ்ணா ஆகியோா் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கே.எம்.ஜி. கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், ஆா்.பாலசுப்பிரமணி, அகத்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளா் பி.பாலாஜி, உறுப்பினா்ஆா்.எம்.பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT