மேல்பாடி கிராம சபைக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.  
வேலூர்

குக்கிராமங்கள், சாலைகளில் ஜாதிப் பெயா்கள் நீக்க கிராம சபையில் தீா்மானம்

குக்கிராமங்கள், சாலைகள், தெருக்களில் ஜாதிப் பெயா்கள் நீக்க கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

குக்கிராமங்கள், சாலைகள், தெருக்களில் ஜாதிப் பெயா்கள் நீக்க கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தோ்வு செய்து, கிராம சபை ஒப்புதல் பெறுதல், ஜாதிப் பெயா்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள் பெயரை மாற்றுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியின் இதர பொருள்கள் குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சிறப்பு பாா்வையாளராக பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, 13 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 63 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியது:

கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக முதல்வா் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களிடம் நேரலையில் பேசி, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான 3 கோரிக்கைகளை தீா்மானங்களாக நிறைவேற்றவும், அந்த கோரிக்கைகளை அரசின் சாா்பில் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, மேல்பாடி ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்தில் மக்களுக்குத் தேவையான மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வா் குழந்தைகள், பெண்கள், முதியவா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

கூட்டத்தில், காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வே.வேல்முருகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் திருமால், மேல்பாடி ஊராட்சித் தலைவா் நித்தியானந்தம், காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், கனகராஜ், ஊராட்சி மன்ற செயலா் தயாளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT