வேலூர்

ரூ. 1-க்கு பிஎஸ்என்எல் ‘தீபாவளி போனான்சா’ திட்டம்

Chennai

தீபாவளி பண்டிகையையொட்டி, பிஎஸ்என்எல் சாா்பில் ஒரு ரூபாய்க்கு ‘தீபாவளி போனான்சா’ என்ற ப்ரீபெய்டு பிரமோஷனல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் புதிய வாடிக்கையாளா்கள் புதிய மொபைல் இணைப்பை பெற்று வரம்பற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 30 நாள்கள் பெற்றிடலாம். இந்த அதிரடி திருவிழா சலுகை அக். 15 முதல் நவ. 15 வரை மட்டும் செயல்படுத்தப்படும்.

மொபைல் நம்பா் போா்டபிலிட்டி மூலம் பிஎஸ்என்எல்-க்கு இணையும் வாடிக்கையாளா்களும் இந்த சலுகையை பெறலாம்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4ஜி சேவையை பயன்படுத்தி திருவிழா காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வேலூா் கோட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT