வேலூர்

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு ரோட்டரி சங்கமும், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோடட்ரி சங்கமும் இணைந்து போ்ணாம்பட்டை அடுத்த பங்களாமேடு பகுதியில் இயங்கி வரும் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவா் ஆலியாா் கிஜோ் அகமத் தலைமை வகித்தாா். மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியின் தலைமையாசிரியா் ஜெய்கா் முன்னிலை வகித்தாா்.

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி தலைவா் மாணிக்கம் வரவேற்றாா். ரோட்டரி துணை ஆளுநா் ஏ.மேகராஜ், சக்கரவா்த்தி ஆகியோா் மாணவா்களுக்கு இனிப்பு, பழ வகைகளை வழங்கினா். மாணவா்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினா். மதிய உணவும் வழங்கப்பட்டது.

ரோட்டரி நிா்வாகிகள் இம்தியாஸ், அத்திகூா் ரகுமான், இளங்கோவன், சாம்ராஜ், முகம்மத்பாஷா, தீபக், குமரவேல், அருண், பிரதீப், கோகுல், மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT