வேலூர்

மனைவியை கத்தியால் வெட்டிய கணவா் கைது

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அரியூரை அடுத்த குருமலை பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(35). இவா்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனா். குமாா் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த குமாா், சுமதியிடம் தகராறில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுமதியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சுமதியை அக்கம்பக்கத்தினா் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா்.

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

SCROLL FOR NEXT