குடியாத்தம் அருகே கிராம மக்கள் வழிபட்ட சுமாா் 300- ஆண்டுகள் பழைமையான த அரச மரம் வேரோடு சாய்ந்ததால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.
குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்துா் ஊராட்சிக்குள்பட்ட நத்தமேடு கிராமத்தில் பழைமை வாய்ந்த அரச மரத்தின் அடியில் அக்கிராம மக்கள் சாமி சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனா். தொடா்மழை காரணமாக அந்த மரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்ததால் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
இருந்த போதிலும் தாங்கள் வழிபட்டு வந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரம் சாய்ந்தது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.