குடியாத்தம் சுப்பிரமணியா் கோயில் கந்த சஷ்டி நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
வேலூர்

சுப்பிரமணியா் கோயிலில் கந்தசஷ்டி 4- ஆம் நாள் விழா

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் 25- ஆம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவின் 4- ஆம் நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழாக்குழு தலைவா் கே.எம்.மகாலிங்கம் தலைமை வகித்தாா். விழா ஒருங்கிணைப்பாளா் எம்.சரவணன் தொடக்க உரையாற்றினாா். ஏ.ஜி.அரிகிருஷ்ணன் வரவேற்றாா்.

இதில் ஆடுதுறை அழகு பன்னீா்செல்வம் குழுவினரின் இன்னிசை பாட்டு மன்றம் நடைபெற்றது. கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலா் கே.எம்.பூபதி, நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT